About

எம்மை பற்றி

ஸர்வ மங்களா மங்கள சேவை

ஸர்வ மங்களா மங்கள சேவை என்பது 1996ஆம் ஆண்டு கனடாவில் பதிவு செய்யப்பட்ட இந்து சமய கிரியா சேவைகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை நடத்திவருபவர் சிவஸ்ரீ ராம் சர்வலோகேஸ்வர குருக்கள்(ஈசன் ஐயா) ஆவர்.

இந்நிறுவனம் மூலம் திருமணங்கள், பதிவுத் திருமணங்கள், பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகு விழா, புண்ணியாகவாசனம், அரங்கேற்றம் மற்றும் சிரார்த்தம் போன்ற சைவ சமய நிகழ்வுகள் ஆகம முறைகளுக்கு ஏற்ப சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

அன்பான பேச்சு, நேரம் தவறாத சேவை மற்றும் மரபு முறைகளை மதிக்கும் பண்பு ஆகியவை இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன.

ஸர்வ மங்களா மங்கள சேவை

இந்த நிறுவனம் 1996ம் ஆண்டு மே மாதம் கனடாவில் பதிவு செய்யப்பட்ட இந்துமத கிரியா சேவைகள் செய்கின்ற தனிநபர் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை பதிவு செய்து நடத்திவருபவர், இலங்கை வடமராட்சி உத்தர துன்னாலையைப் பூர்வீகமாகக் கொண்ட சாரதாபீட சமஸ்கிருத ஆசிரியர் சோதிடர் சிவஸ்ரீ இராமச்சந்திர ஐயர் (சின்னக்குரு ஐயா) அவர்களின் புதல்வர் சிவஸ்ரீ ராம் சர்வலோகேஸ்வரக்குருக்கள் (ஈசன் ஐயா) ஆவார். தாயத்தில் பள்ளிப்பருவத்திலிருந்தே குருத்துவப்பணியில் பேரார்வம் கொண்டு தந்தையிடம் முறைப்படி குருத்துவப்படிப்பை ஆரம்பித்து, குருத்துவப்பணியையும் பயின்று ஆலயப் பணிகளை ஆரம்பித்தார்.

1993ம் ஆண்டு கனடாவிற்கு வந்து தனது வாழ்க்கையை அங்கு ஆரம்பித்தார். கனடாவில் வியாகரண சிரோண்மணி சிவஸ்ரீ பூரண தியாகராஜக்குருக்களிடம் மேலதிகமாக ஆகம கிரியைகளையும், தென்னிந்தியாவில் ப்ரம்மஸ்ரீ பாலு சாஸ்த்திரிகளிடம் வேத பாடங்களையும் பயின்று, கனடாவில் இந்த நிறுவனம் மூலம் சைவ சமயப் பணிகளை சிறப்புற செய்து வருகிறார்.

1993ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2025 டிசம்பர் 14ம் திகதி வரை 976 திருமணங்களையும், 924 பதிவுத்திருமணங்களையும் நடத்தி வைத்துள்ளார். இலங்கை மற்றும் இந்திய மக்களின் இல்லங்களில் நடைபெறும் சமய நிகழ்வுகளை திறம்பட வழிநடத்தி செய்து, பலருடைய அன்பையும் மதிப்பையும் பெற்றவர். மக்களோடு அன்பாக பேசி உறவாடும் தன்மை மிக்கவர். அதுமட்டுமன்றி, பொதுநல திட்டங்களிலும் விருப்போடு பங்கேற்று பணியாற்றியுள்ளார். பொது நல அமைப்புகளில் முக்கிய பதவிகளில் பணியாற்றி பல நற்பணிகளை செய்துள்ளார். தனிப்பட்ட வாழ்வில் இதுவரை 14 தடவைகள் இரத்த தானம் செய்துள்ளார்.

தமிழ் மீது பேரார்வம் கொண்ட இவர், ஆரம்ப காலத்தில் “துன்னையூர் சிட்டுக்குருவி” என்னும் புனைப் பெயரில் வானொலி மற்றும் பத்திரிகைகளில் தொடர்கதை, நாடகம், கவிதை, இசையும் கதையும் போன்ற பல ஆக்கங்களை தொடர்ந்து எழுதியுள்ளார்.

Sarva Mangala Mangala Service

Founded in May 1996 in Canada, Sarva Mangala Mangala Services is a dedicated organization for performing Hindu religious rituals and Shaiva ceremonies.
The organization is led by Sivashri Ram. Sarvalogeswara Kurukkal
(Esan iya), son of Chodidar Bramashri Ramachandraiyar (Chinnakuru Aiya) of the Saratha peedam Sanskrit School in Northern Sri Lanka. From an early age, he trained under his father in priestly duties and actively participated in temple rituals and daily worship.

Since moving to Canada in 1993, he further trained in Agama rituals under Vyakarana Sironmani Sivashri Poorn. Thyagaraja Kurukal and in Vedic chants under Bramashri Balu Shastrigal, a South Indian Vedic scholar. Through this organization, he has been performing Shaiva religious services across Canada with excellence.

Key Services Include:
* Temple rituals such as Kumbhabhishekam (consecration ceremonies) and Mahotsava festivals
* Private household ceremonies including weddings, registered marriages, housewarmings, flower sanctification rituals, and inaugurations
From October 1993 to December 2025, he has conducted 976 weddings and 924 registered marriages in Canada, earning widespread respect and affection for his professionalism, devotion, and personable approach.

He has actively contributed to public welfare initiatives and is recognized for his generosity, including donating blood over 14 times. A passionate advocate for the Tamil language, he has published creative works—stories, plays, poems, and music—under the pen name “Thunnaiyur Sittukruvi” in Canadian media.
Core Values: Truth | Integrity | Duty

    Product added to cart